இலங்கைப் பன்மைச் சமூகத்தில் சகவாழ்வு - தேவையும் யதார்த்தமும்- தொடர் - 02- றாபி எஸ் மப்றாஸ்


இலங்கைப் பன்மைச் சமூகங்களுக்கு மத்தியில் சகவாழ்வைக் கட்டியெழுப்புதல் - ஓர் இஸ்லாமிய நோக்கு –
தொடர் - 02

இலங்கைப் பன்மைச் சமூகத்தில் சகவாழ்வு - தேவையும் யதார்த்தமும்-


றாபி எஸ் மப்றாஸ்

பன்மைச் சமூகம் என்பதன் வரைவிலக்கணம்

பன்மைச் சமூகம் என்பதற்கு ஏராளமான வரைவிலக்கணக்கங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
1. 'பல்வேறுபட்ட நம்பிக்கை கோட்பாடுகளை கொண்ட மக்கள் ஒன்றாக வாழும் அதே நேரம் பரஸ்பரம் சகிப்புணர்வோடு வாழம் சமூகத்தை பன்மைத்துவ சமூகம் எனலாம்.(www.vocabulary.com)

2. 'வித்தியாசமான வகுப்புக்கள், மதங்கள், இனங்கள் ஒன்றாக ஒரே சமுதாயத்தில் தத்தமது பாரம்பரியங்களையும் தனித்துவங்களையும்; பேணி வாழும் சமூகம் பன்மைத்துவ சமூகம் என அகை;கப்படும்.'  (www.merriam-webster.com)
எனவே, மேற் சொன்ன வரைவிலக்கணங்களை வைத்துப் பார்க்கும் போது பன்மைத்துவ சமூகமானது மூன்று விதமான இயல்புகளை கொண்டதாக அமையும்.
1. பல விதமான இன, மத, கலாசார, வகுப்பு ரீதியான வேறுபாடுகளை கொண்டதாக அமையும்.
2. அப்பன்மைச் சமூகங்களில் பரஸ்பர சகிப்புணர்வு பேணப்படும் அல்லது பேணப்பட வேண்டும்.
3. அச்சமூகங்களில் உள்ள பல்லின, கலாசார, மதக் குழுமங்கள் தமக்கேயுரிய தனித்துவங்களையும், பாரம்பரியங்களையும் பேணுவதற்கு அச்சமூகத்தில் ஏகோபித்த அங்கீகாரம் வழங்கப்படும் அல்லது வழங்கப்பட வேண்டும்.

பன்மைச் சமூகங்களின் நாடான இலங்கையும் அதில் சகவாழ்வின் தேவையும்

இந்து சமுத்திரத்தின் முத்தாய், இயற்கைத் துறைமுகத்தை அருஞ்சொத்தாய் கொண்டது எமது தாய்த் திரு நாடாகும். பல்வேறுபட்ட இயற்கை வளங்களைப் போலவே பலவிதமான இன, மத, மொழிகளையும் இந்நாடு கொண்டுள்ளது.
அந்த வகையில், சிங்களவர்கள்(74.1%), இலங்கைத் தமிழர்கள்(11.1%), இலங்கைச் சோனகர்கள்(9.3மூ), இந்தியத் தமிழர்கள்(4.1%) என பல்லினங்கள் வாழ்கின்றன. அதே போல, தேரவாத பௌதர்கள் (70.19மூ), இந்து (12.6%), இஸ்லாம் (9.7%), கிறிஸ்தவம் (7.4%) போன்ற பல மதங்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளும் இந்நாட்டில் பரவலாக காணப்படுகின்றன. (Census of Population and Housing of Sri Lanka – 2012, Department of Census and Statistics, Sri Lanka. https://en.m.wikipedia.org 2012ம் ஆண்டு கணக்கெடுப்பு.)

இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு இனத்துக்கும் மதத்துக்கும் பழமையான நீண்ட வரலாறு காணப்படுவதைனை இன்று எல்லா சமூகங்களும் ஏற்றிருக்கின்றன.
இந்நாட்டின் வரலாற்றில் தொண்டு தொட்டு இப்பல்லினங்களும் மதங்களும் சுதந்திரத்திற்கு முந்திய காலப்பகுதி வரை மிக இறுக்கமான நெருக்கமான பிணைப்புடன் வாழ்ந்தன என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும். என்றாலும், சுதந்திரத்திற்கு பிந்திய காலப்பகுதிகளில் சிறுபான்மை சமூகங்களின் அரசியல், நிர்வாக, மொழி ரீதியான உரிமைகள் ஓரங்கட்டபடத் துவங்கின. 1956 தனிச் சிங்களச் சட்டம் இதற்கு சிறந்த சான்றாகும். பிற்பட்ட காலப்பகுதிகளில் அவ்வப்போது சிங்கள – தமிழ் (ஜ¬_லைக் கலவரம்- 1983), சிங்கள – முஸ்லிம் இனக்கலவரங்களும் முப்பது வருடத்துக் கொடிய யுத்தமும் இந்நாட்டை ஆக்கிரமிருத்திருந்தன.
யுத்த முடிவுக்கு பின்னர் இந்நாட்டில் இனக்கலவரங்களும் இன முறுகல்களும் ஓய்ந்து சமாதானம் மிளிரும்; சககவாழ்வு மலரும் என்று எதிர்பார்த்திருந்த பலருக்கு ஏமாற்றம் மாத்திரமே பதிலாகக் கிடைத்தது. அதுமாத்திரமின்றி இலங்கையிலிருந்து சட்ட விரோத குடிப்பெயர்வுகள் (ஐடடநபயட ஆபைசயவழைn) அதிகரிக்கத் துவங்கின. மேலும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீடு, ஜி.எஸ்.பி பிளஸ்(GSP+) போன்ற வரிச் சலுகைகள் ரத்துச் செய்யப்பட்டமை போன்ற இன்னோரன்ன காரணங்களினால் அவசரமாகவும் அவசியமாகவும் இந் நாட்டில் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், சகவாழ்வை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட தேசிய ரீதியான தருஸ்மன் அறிக்கை,  கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள்(LLRC) போன்ற முயற்சிகளும் சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீடு போன்ற சர்வதேச முன்னெடுப்புக்களும் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்துள்ளன எனலாம். இவற்றுக்கு அப்பால் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல பௌத்த தீவிரவாத இயக்கங்களின் விஷமப் பிரசாரங்கள் சிங்கள – முஸ்லிம்களுக்கிடயிலான இன வரிசலை ஏற்படுத்தியுள்ளதோடு சகவாழ்வை கட்டியெழுப்புதல் என்ற கனவு; கனவாகவே கலைந்து போனதையும் அண்மைக்கால நிகழ்வுகள் பறைசாற்றி நிற்கின்றன.
இந்த பின்னணியில்தான், பல்லின, மத, கலாச்சாரங்களைக் கொண்ட எமது நாட்டில் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கான அவசியப்பாடு பல மட்டங்களிலும் உணரப்பட்டு வருகின்றது.

இஸ்லாத்தின் பார்வையில் பன்மைத்துவம்

இஸ்லாம், இன, மத, மொழி வேறுபாடுகளை அனுசரித்துச் செல்வது மாத்திரமல்லாது அத்தகைய வேறுபாடுகளை இறை நியதியாக கருதுகின்றது. பன்மைத்துவம் உலகில் யதார்த்தமானது: இயல்பானது என்பதை இறை மார்க்கம் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது.
மேலும், இத்தகைய நிற, மத, வேறுபாடுகள் இறைவனின் அத்தாட்சியை சுட்டிக்காட்டும் அத்தாட்சிகள் எனவும் அல் குர்ஆன் கூறுகின்றது.
'வானங்கள் பூமியின் படைப்பும் அமைப்பும் உஙகளது மொழிகளும் நிறங்களும் வித்தியாசமாக அமைந்திருப்பது அவனைக் காட்டும் அத்தாட்சிகளை சார்ந்தவையாகும். இதில் அறிவாளிகளுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.' ( அர்ரூம் - 22)

உலகிலுள்ள இனங்களும், கோத்திரங்களும், கிளைகளும், குலங்களும் ஒருவர் மற்றவரை விட உயர்ந்தவர் என்ற பாகுபாட்டுக்காக அல்லளூ ஒருவர் மற்றவரை இன்னார் என்று அறிந்துக் கொள்ளும் நோக்கத்துக்காகவே இத்தகைய பன்மைத்துவ ஏற்பாடுகளை அல்லாஹ் இவ்வுலகில் வைத்திருக்கிறான் என்பதையும் அல் குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது.
'மனிதர்களே! உங்களை நாம் ஒரு ஆணிலிருந்தும், ஒரே பெண்ணிலிருந்தும் படைத்து உங்களை இனங்களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கியிருப்பது ஒருவர் மற்றவர்களை பரஸ்பரம் புரிந்துக் கொள்வதற்கேயாகும்.'  (அல் ஹூஜராத் - 13)
     
மேலும், இஸ்லாம், 'உங்களுக்கு உங்களது மார்க்கம்ளூ எனக்கு எனது மார்க்கம்' ( காபிருன் - 06) என்ற அல்குர்ஆன் வசனத்தினூடாக பன்மைத்துவ சமூகமொன்றில்  வாழும் ஒவ்வொரு மனிதனும் அவர் சார்ந்த மதத்தை பின்பற்ற முடியும் என்பதை கண்ணியமாக ஏற்றுக் கொள்கிறது.
எனவே, தோட்டத்து மலர்கள்  பல வண்ணங்களாக பூத்திருப்பது போல் மனித சமூகங்கள் பல்லினங்களாகவும் பல்கலாசாரப் பின்னணியில் அமைந்திருப்பதை இறைநியதியாக கருதும் இஸ்லாம், இத்தகைய வேறுபாடுகள் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொள்வதற்காக ஏற்படத்தப்பட்டுள்ளதாகவும் விளக்குகிறது.

(2016ம் ஆண்டு இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களினால் நடாத்தப்பட்ட அகில இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் பணப்பரிசில் பெற்ற கட்டுரை)

No comments:

Post a Comment