*~29.03.2020 அன்று இறையடி சேர்ந்தBook Binder சலீம் அவர்களுக்காக இதயத்தின் ஆழத்திலிருந்து...*~
1920 களுக்கு முன்பே புத்தகங்களைச் செம்மையாகக் கட்டி (Binding ) காலாகாலத்துக்கும் அப்புத்தகங்களை வாழவைத்தவர்தான் (Book binder) முஹம்மது இப்றாஹிம்...
இவரது 06 பிள்ளைச் செல்வங்களில் இரு ஆண்புதல்வர்கள் மூத்தவர் சாலிஹ் (இளம்பிறை) இளையவர் சலீம் (Book binder)
இவரது 06 பிள்ளைச் செல்வங்களில் இரு ஆண்புதல்வர்கள் மூத்தவர் சாலிஹ் (இளம்பிறை) இளையவர் சலீம் (Book binder)
தந்தை வழியில் தனையன் என புத்தகங்களைக் கட்டும் பணியை (Book binding ) பாரம்பரிய முறையில் செம்மையாகவும் செழுமையாகவும் வியாபாரமாக நோக்காது ஒரு சேவையாகவே செய்து வந்தவர்தான் Book binder சலீம்.
புத்தகங்கள் மாத்திரமல்ல புனித குர்ஆன் பிரதிகளையும் மிகவும் நேர்த்தியாக binding செய்து தருவதில் அவருக்கு நிகர் அவர்தான் அதனால்தான் ஊரிலுள்ள அத்தனை உலமாக்களுக்கும் இவர் பரிட்சயமானவர்..
கற்றறிந்த பலரிடம் கால்நடையாகவே தேடிச் சென்று அவர்களுடைய புத்தகங்களை பல போது இலவசமாகவே binding செய்து கொடுக்கும் தயாள குணம் கொண்டவர்.
பிரசவத்திற்கு இலவசம் என்பது போல் புனித நூல்களுக்கு இலவசம் என்பது இவரிடம் உள்ள எழுதப்படாத விதி...
மருதமுனை கடந்தும் பல ஊர்களிலிருந்து இக்காலத்திலும் அவரைத் தேடி வருவோர் ஏராளம்
பிரசவத்திற்கு இலவசம் என்பது போல் புனித நூல்களுக்கு இலவசம் என்பது இவரிடம் உள்ள எழுதப்படாத விதி...
மருதமுனை கடந்தும் பல ஊர்களிலிருந்து இக்காலத்திலும் அவரைத் தேடி வருவோர் ஏராளம்
வறுமையில் வாடிய போதும் யாரிடமும் இவர் கையேந்தியது கிடையாது.
யாரை எங்கு கண்டாலும் புன்முறுவலோடு எதிர் கொள்ளும் குணம் இவருடையது.
யாரை எங்கு கண்டாலும் புன்முறுவலோடு எதிர் கொள்ளும் குணம் இவருடையது.
இறைத் தொடர்புகளில் அதிக ஆர்வம் கொண்டவர்.
"தொழும்போது அடிக்கடி மறக்குது ஹஸ்ரத்" இறுதிக் காலங்களில் அவர் என்னோடு செய்யும் கவலை நிறைந்த முறைப்பாடு இது...
"தொழும்போது அடிக்கடி மறக்குது ஹஸ்ரத்" இறுதிக் காலங்களில் அவர் என்னோடு செய்யும் கவலை நிறைந்த முறைப்பாடு இது...
இன்றோடு அன்புக்குரிய Book binder அப்பச்சி (எனது தாயின் தாய்மாமன்) அவர்கள் இறையடி சேர்ந்து பத்து நாட்கள் கடந்து செல்கின்றன.
அவன்னாரின் சுவன வாழ்வுக்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போம்
பதிவு
றாபி எஸ் மப்றாஸ்
07.04.2020
றாபி எஸ் மப்றாஸ்
07.04.2020

No comments:
Post a Comment