இமாம் ஷாபிஈ அவர்களின் கவிதைகளிலிருந்து சில துளிகள் - தொடர் - 02 - தமிழில் : றாபி எஸ் மப்றாஸ்

இமாம் ஷாபிஈ அவர்களின் கவிதைகளிலிருந்து சில துளிகள் - தொடர் - 02
மூலம் : தீவானுஷ் ஷாபிஈ (அரபு)
தமிழில் : றாபி எஸ் மப்றாஸ்

01. அறிவு பயனுள்ள ஒரு தோழன்

நான் எங்குதான் சென்றாலும் - எனது
அறிவு என்னோடு இருந்து எனக்குப் பயனளிக்கிறது
எனது உள்ளம் ஒரு பாத்திரம் அதற்கு
நான் வீட்டில் இருந்தால் - அங்கே
அறிவு என்னோடு இருக்கும் - அல்லது
நான் சந்தையில் இருந்தால்
அறிவும் சந்தையில் இருக்;கும்

02. அறிஞனும் ஆன்மீகவாதியும்

அறிஞனாய் ஆன்மீகவாதியாய் இரு
இதில் ஒருவனாய் மாத்திரம் இருந்து விடாதே
இறைவன் மீது ஆணையாய் உனக்கு ஒரு உபதேசம்
அவர் (அறிஞன்) கடுமையானவர் - அவரது
உள்ளம் இறையச்சத்தை சுவைக்கமாட்டாது
இவர் (ஆன்மீகவாதி) அறிவீனர்
அறிவில்லாதவர் எவ்வாறு சீரடைவார்?

03. அற்பமானவனோடு பழகுதல்

மானத்திற்கு கேடு செய்ய – நீ
நாடியவாறு தூற்று
அற்பனுக்கு மௌனம் தான் என் பதில்
நான் பதிலளிக்க இயலாதவன் அல்ல
நாய்களுக்கு பதிலளிக்க
சிங்கத்திற்கு என்ன தேவை இருக்கிறது?

04. தீங்கைத் தவிர்த்தல்

எவர்மீதும் குரோதம் கொள்ளாமல் மன்னிக்கும் போது
பகைமைகளின் துன்பத்திலிருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்
வாழ்த்துக்களால் வரும் தீங்குகளை விட்டும் விலகிக் கொள்ள – என்
எதிரிகளைக் காணும் போது அவர்களையும் வாழ்த்துகிறேன்
அன்பில் எனது உள்ளம் நிறைந்திருப்பவர்களுக்கு – நான்
முகமலர்ச்சியுடன் தோன்றுகிறேன்
நான் வெறுப்பவர்பளுக்கும் அவ்வாறே காட்சியளிக்கிறேன்

25.10.2020

No comments:

Post a Comment