பிள்ளையின் பூரண விருத்தியில் சூழலின் செல்வாக்கு - றாபி எஸ் மப்றாஸ்


பிள்ளையின் பூரண விருத்தியில் சூழலின் செல்வாக்கு 




றாபி எஸ் மப்றாஸ் 

பூரண விருத்தி
பொதுவாக விருத்தி என்பது மிகவும் சிக்கலடைந்ததும் பரந்த திறன்களின் தொகுதியாகவும் அமைவதனாலும் வளர்ச்சி, விருத்தி என்பன பற்றிய தெளிவின்மை காணப்படுவதாலும் பூரண விருத்தி என்ற பதத்தை இலகுவில்; வரையறை செய்திட முடியாது.
என்றாலும்> வளர்ச்சி என்பது பிள்ளை கருவுற்றது முதல் அதனது உடலியல் சார்ந்து ஏற்படக்கூடிய உயரம்> நிறை> எலும்புக் கூட்டின் நிறை, சுவாசத் தொகுதியின் பருமன் போன்ற மனித உருவின் அளவில் ஏற்படும் மாற்றமாகும் என உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
அதே போல்> விருத்தி என்பது பிள்ளையின் உடல்> சமூகம்> மனவெழுச்சி> அறிவு என்பவற்றில் ஏற்படும் ஒழுங்குமுறையான மாற்றம் காரணமாக பிள்ளையில் ஏற்படும் தொழிற்பாட்டு ரீதியான முன்னேற்றம் ஆகும். 
எனவே பிள்ளையின் வளர்ச்சியும் விருத்தியும் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவை எனினும் வேறுபட்டவை வளர்ச்சி உடல் சார்ந்ததாக இருக்கும் அதே வேளை விருத்தி உடல்> சமூகம்> மனவெழுச்சி> அறிவு என பல விடயங்கள் சார்ந்தவை.
விருத்தி என்பது பல துறைகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் நடத்தல்> ஓடுதல்> பாய்தல் போன்ற உடல் சார்ந்த இயக்கத் திறன் விருத்தி> நினைவில் கொள்ளல்> பிரச்சினைகளைத் தீர்த்தல்> பொறிகளை> சாதனங்களைக் கையாளுதல் போன்ற அறிவு திறன் சார் விருத்தியாகும். பிறருடன் ஒத்துழைப்புடன் செயற்படுதல்> கோபம்> பயம்> வெட்கம் போன்றவற்றை அளவோடு கையாளுதல் போன்றன மனவெழுச்சி சார் விருத்திகளாகும். மேலும் பெரியோர்> ஆசிரியர்களை மதித்தல், சமூக அறவொழுக்கங்களைக் கைக்கொள்ளுதல் போன்றன ஒழுக்க விருத்தியாகும் எனவே இத்தகைய அனைத்து துறைகளிலும் ஏற்படும் நூறு வீத விருத்தியே பூரண விருத்தியாகும்.

பிள்ளை விருத்தியும் சூழலும்

ஒரு பிள்ளையின் வளர்ச்சிலும் பரம்பரைக் காரணிகளைப் போலவே சூழற்காரணிகளும் தாக்கம் செலுத்துகின்றன. அந்த வகையில்> பிள்ளை விருத்தி எனும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு மேலதிகமாக அவனிடம் விருத்தியடையும் சிக்கலான திறன்களின் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் எனலாம். அதே போல ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் கருவுற்றது முதல் எதிர்கொள்ளும் அத்தனை நிகழ்வுகளும் சம்பவங்களும் அனுபவங்களும் அவனது சூழல் என்று வரையறுக்கலாம். ஒரு குழந்தையின் சூழலை பிரசவத்திற்கு முன்னுள்ள சூழல்> பிறப்பிற்கு பின்னுள்ள சூழல் என இருவகைப்படுத்தலாம். மேலும் சூழற்காரணிகளாக தாயின் கருவறை> குடும்பம்> சகபாடிகள்> சமூக அமைப்புக்கள், நிறுவனங்கள் என பலவற்றை அடையாளப்படுத்த முடியும். இச்சூழற்காரணிகள் அனைத்துமே பிள்ளை விருத்தியில் சாதகமான அல்லது பாதகமான வகையில் பாரிய வகிபங்கை ஆற்றுகின்றன என்பதே சமூகவியலாளர்களான போன்ற பலரது கருத்தாகும்.

1. பிள்ளையின் அறிவு திறன் விருத்தியில் பிறப்புக்கு முன்னுள்ள சூழலின் செல்வாக்கு

பிள்ளையின் கருவறைக் காலத்தில் தாயின் உடல் நலம், போஷாக்கு, மனப்பாங்கு, மனஎழுச்சிகள் பிள்ளையின் உடல் வளர்ச்சியில் சாதக பாதக தாக்கங்களைச் செலுத்துவது போலவே பிள்ளையின் அறிவு திறன் விருத்தியிலும் நன்கு தாக்கம் செலுத்துவதை அவதானிக்க முடியும். அந்த வகையில் எனது வகுப்பில் நன்றாக செயற்படும் ஓரு மாணவன் பரீட்சைகளின் போது குறைந்த புள்ளிகளைப் பெறுவதையும் மேடை நிகழ்ச்சிகளின் போது அதிக தயக்கம் காட்டுவதையும் அவதானித்து அவனது பெற்றோரை வினவிய போது அப்பிள்ளையின் தாய் அவனை கருவுற்றிருக்கும் போது ஆற்றிலே குளிக்கச் சென்று பயந்து ஏங்கிப் போனதாக தகவல் கிடைத்தது. மேலும் அத்தாயின் மற்றப் பிள்ளைக்கு இத்தகைய நிலை காணப்படவில்லை எனவே குறித்த குழந்தையின் பிரசவத்திற்கு முன்னரான நிலை அவனது திறன் விருத்தியில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதைக் காணலாம். 

இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஒரு தாய் கருவுற்றது முதல் அவருக்கான போஷாக்கு ஆலோசனை வழிகாட்டல் வழங்கப்படுவது போலவே நுண்ணறிவுப் பயிற்சிகள் உளவள ஆலோசனைகள் மெல்லிசையை செவிமடுக்கச் செய்தல் போன்ற வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இத்தகைய பயிற்சிகள், பிறக்கும் குழந்தையை அறிவு திறன் வளர்ச்சியடைந்த பிள்ளையாக பிற்காலத்தில் அடையாளப்படுத்த முடிகிறது. எனவே இங்கு பிறப்புக்கு முன்னுள்ள சூழல் பிள்ளையில் சாதகமான மாற்றங்களை செலுத்துவதைக் காணலாம்

2.பிள்ளையின் மொழி விருத்தியில் குடும்பச் சூழலின் செல்வாக்கு

பிள்ளை பேச ஆரம்பிக்கும் போது குடும்பச் சூழலை முழுமையாக அவதானித்து பெற்றோர் உறவினர்கள் பேசுகின்ற அதே மொழி, மொழி நடை, உச்சரிப்புக்கள், கையாளப்படும் சந்தர்ப்பங்கள், அதற்கேற்ற அங்க அசைவுகளை பிள்ளையும் வெளிப்படுத்த ஆரம்பிப்பதை அவதானிக்கலாம். தீய வார்த்தைகள் பேசப்படும் ஒரு குடும்பச் சூழலில் மிக சர்வ சாதாரணமாக பிள்ளை தீய வார்த்தைகளை பேசுவதையும் கருக்குடும்பத்தில் வளரும் பிள்ளையை விட கூட்டுக் குடும்பத்தில் வளரும் பிள்ளையின் மொழி விருத்தி அதிகமாகவிருப்பதையும் பிள்ளையின் மொழி விருத்தியில் குடும்பச் சூழல் பரந்தளவில் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதற்கு உதாரணமாகக் கொள்ள முடியும்.

3. பிள்ளையின் ஒழுக்க விருத்தியில் சகபாடிக் குழுக்களின் செல்வாக்கு

ஒரு பிள்ளை தன் குடும்பத்தை தாண்டி அவனது சகபாடிக் குழுக்களின் விருப்பு, வெறுப்பு, பண்புகள் என அனைத்தையும் அதிகமாக உள்வாங்கிக் கொள்வதோடு தனது ஒழுக்க விருத்தியில் சாதக பாதக மாற்றங்களையும் பெற்றுக் கொள்கிறான். உதாரணமாக, ஒற்றுமையுடன் இணைந்து நடத்தல், ஆசிரியரை மதித்தல் போன்ற சாதக மாற்றங்கள் ஏற்படுவதிலும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பகிடி வதைகளில் ஈடுபடுதல் போன்ற பாதக மாற்றங்களிலும் சகபாடிக் குழுக்களின் செல்வாக்கு இன்றியமையாதது. இதனால்தான் அனைத்து மதங்களும் நண்பனை தெரிவு செய்தல் குறித்து அதிகம் வலியுறுத்தியுள்ளன.

4. மனவெழுச்சி விருத்தியில் குடும்பச் சூழலின் செல்வாக்கு 

பிள்ளையின் பிறப்பின் பின்னரான ஆரம்ப காலப்பகுதிகளில் குடும்பச் சூழலின் செல்;வாக்கே அப்பிள்ளையில் அதிகம் தாக்கம் செலுத்துகிறது. இதனால் பெற்றோர்களுக்கிடையான சண்டை சச்சரவுகளும் பிள்ளை மீதான துன்புறுத்தல்களும் பிள்ளையின் அடிப்படைத் தேவைகளுள் சிலவான அன்பு, பாதுகாப்பு தேவைகள் இழக்கப்படுகின்ற போதிலும் பிள்ளை விரக்தியடைந்த அல்லது உணர்ச்சிவசப்படக்கூடிய அல்லது அதிகம் பயந்த சுபாவமுள்ள பிள்ளையாக மாறுவதை அவதானிக்க முடியும்.



No comments:

Post a Comment