இலங்கை முஸ்லிம்களின் கவனத்திற்கு !!! - தொடர் - 08 - றாபி எஸ் மப்றாஸ்

இலங்கையில் சகவாழ்வை கட்டியெழுப்ப சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை 
தொடர் - 08
றாபி எஸ் மப்றாஸ்


1. சமூக வாழ்வொழுங்குகளை நெறிப்படுத்திக் கொள்ளல்

இலங்கையில் சகவாழ்வு கட்டியெழுப்பட வேண்டுமாயின் மேற்சொன்ன விடயங்;கள் தவிர இன்னும் பல நெறிப்படுத்தல்களையும் ஒழுங்குபடுத்தல்களையும் இலங்கை முஸ்லிம் சமூகம் அவசரமாக செய்தாக வேண்டும். இவை இலங்கையில் இஸ்லாத்தின் சுமுகமான இருப்புக்கும் சகவாழ்வின் வளர்ச்சிக்கும் வழிகோலும்.

2. ஒலிப்பெருக்கிப் பாவனை

இன்று ஒலிப்பெருக்கிப் பாவனையில் அளவுக்கடந்து விட்ட சமூகமாக நாம் மாறியிருக்கிறோம். வெறுமனே, 9.7மூ ஆக வாழும் நாம் எமது ஐவேளை தொழுகைக்கான அதான்களோடு ஒலிப்பெருக்கி பாவனையை நிறுத்திவிடாது பயான் நிகழ்ச்சிகள், குத்பா பேருரைகள், கந்தூரி, ஸலவாத் மஜ்லிஸ் இது தவிர ரமழான் காலங்களில் இரவு நேர தொழுகைகள் அனைத்தையும் ஒலிப்பெருக்கியினூடாக மேற்கொள்வது பிற சமூகங்களுக்கு தொந்தரவையும், எரிச்சலையும் ஏற்படுத்துகின்றது. இதனால் அண்மைக்காலங்களில் எத்தனையோ சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன.
எனவே, எமது ஒலிப்பெருக்கி பாவனையை பள்ளியின் பரப்பு வரை சுருக்கி கொள்வதும் குறிப்பாக பிற சமூகத்தவருக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்கள் குறித்த சில பள்ளிகளின் சுற்றுவட்டத்துக்கு மாத்திலம் கேட்குமளவுக்கு அதான் கூறுவதோடு சுருக்கிக் கொள்வது நல்லது.

3. முஸ்லிம் பெண்களின் ஆடை அமைப்பு

அண்மைய சில வருடங்களாக எமது முஸ்லிம் பெண்கள் கறுப்பு நிற ஆடையோடு முகத்தை மூடும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் பெண்கள் உடல் முழுவதும் மறைப்பது கட்டாயமானதாகும் என்றதொரு வாதமும் முகம் மணிக்கட்டு தவிர ஏனைய பகுதிகளை மறைப்பது கட்டாயமாகும் என மற்றொரு வாதமும் முன்வைக்கப்படுகின்றன. இதில் இரண்டாவது வாதமே பலமான வாதமாகும் என்பது இஸ்லாமிய சட்டத்துறை  அறிஞர்களது பரவலான நிலைப்பாடாகும்.  (தப்ஸீருல் முனீர், கலாநிதி உஸ்தாத் வஹ்பா ஸூஹைலி, பத்தாம் பதிப்பு-2003, தாருல் பிக்ர், டமஸ்கஸ், 09ம் பாகம், பக்: 551)

இவற்றுக்கப்பால் நிகாப் (முகத்தை மூடுதல்) குறித்த பாரிய சர்ச்சைகளும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற கருதுகோள்களும் தேசிய மட்டத்தில் எழுந்துள்ளன. எனவே, பெரும்பான்மை சமூகங்களுக்கு மத்தியில் இஸ்லாத்தின் நலனைக் கருத்திற் கொண்டு முகத்தை மறைக்கும் விடயத்தில் நெகிழ்வுப் போக்கை கையாள்வது சாலச் சிறந்ததாகும்.
அதேவேளை முஸ்லிம் பெண்களின் கறுப்பு நிற ஆடைகளும் பிற சமூகத்தவர் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இஸ்லாம் பல வகையான நிறங்களில் ஆடையணிவதை அனுமதித்திருக்கும் நிலையில் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் கறுப்பு நிறத்தில் விடாப்பிடியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, குறிப்பாக முஸ்லிம் பெண்கள் விதவிதமான நிறங்களில் ஆடையணியவதை வழக்கமாக்கி கொள்வது சமகாலத்துக்கு மிகப்பொருத்தமானதாகும்.
பிற சமூகங்கள் முஸ்லிம் சமூகத்தை எரிச்சலோடும் சந்தேகக் கண் கொண்டும் பார்ப்பதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. ஏனெனில் அத்தகைய பார்வைகள் இலங்கையின் சகவாழ்வுக்கு பேரிடியாக அமையும்.

4. உணவுக்காக உயிரினங்களை அறுத்தல்

அல்லாஹ் எமக்கு ஹலாலாக்கிய (ஆகுமாக்கிய) மாடு, ஆடு, கோழி போன்ற உயிரினங்களின் இறைச்சியைச் சாப்பிடுவதில் தவறேதும் கிடையாது. ஆனால், குறிப்பாக மாடுகளை அறுப்பதற்காக கொண்டு செல்லும்போது அளவுக்கதிகமான மாடுகளை ஒரே வாகனத்தில் அடைத்துச் செல்வதும், அதனை பொது மக்களின் பார்வையில் படும்படி துன்புறுத்தி அறுத்தலும் பின்பு இறைச்சிக்கடைகளில் அவை இரத்தம் சொட்டச் சொட்ட தொங்கவிடுவதும் பார்ப்பவர் நெஞ்சை உருக்கிவிடுகின்றது.
உயிரினங்களிடத்தில் அன்பு காட்டுமாறு ஏவும் இஸ்லாம் மார்க்கம் அதனை நல்ல முறையில் அறுத்துச் சாப்பிடுமாறும் ஏவுகின்றது. அதுமட்டுமல்லாது இந்த நாட்டில் வாழும் பிறசமூகங்கள் மாடு, பசு போன்ற உயிரினங்களை தெய்வமாக மதிக்கின்றன. எனவே, அவர்களின் மனம் புண்படாதவாறு அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏனெனில், இத்தகைய விடயங்கள் கடந்த காலங்களில் பெரும் குழப்பங்களாக விஷ்வரூபமெடுத்துள்ளன. தொடர்ந்தும் எமது வாழ்வொழுங்குகளை நெறிப்படுத்தாவிட்டால் இந்நாட்டில் சகவாழ்வு சாத்தியமற்றுப்போய்விடும்.
மேலும், எமது சமூகத்தில் குறுக்கு வழிகளையும் வட்டித்தொழில்களையும் பொய் புரட்டு கலந்த வியாபாரங்களையும் பயன்படுத்தி வசதியான ஆடம்பர வாழ்வுக்கு அடிமைப்பட்டுப் போகும் சிலரும் இருக்கின்றனர். இத்தகைய போக்கும் பிற சமூகத்தவர்களது கசப்புணர்வை சம்பாதிக்க ஏதுவாக அமைகிறது. 
அதேபோல், இலங்கை முஸ்லிம்களில் பலர் சுற்றுப் புற சூழல் சுத்தத்தில் அக்கறை செலுத்துவதில்லை. பொது குளம் குட்டைகளில் குப்பை கொட்டுதல் வீட்டுக் கழிவுகளை பொதுப்பதைகளில் செலுத்துதல் போன்ற அசுத்தமான வேலைகளில் ஈடுபடுவதில் எமது முஸ்லிம்கள் முன்நிற்கிறார்கள். ஆனால் 'இஸ்லாம் சுத்தம் ஈமானின் பாதி' (முஸ்லிம்) என்றும் 'நிச்சயமாக அல்லாஹ் பாவமீட்சி கோருவோரையும், தூய்மையானவர்களையும் விரும்புகிறான்.' (அல் பகறா - 222) என்றும் சுத்தத்தின் முக்கியத்துவத்தை அல்குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது. மேற்சொன்ன நடவடிக்கைகள் பிற சமூகத்துச் சாதாரண மக்களின் வெறுப்புணர்வை சம்பாதித்துக் கொள்ள காரணமாக அமையும். மேலும், அது இலங்கையின் சகவாழ்வைக் கட்டியெழுப்பும் பணிக்கு பெரும் பாதிப்பாக அமையும். 
எனவே, இலங்கையில் சகவாழ்வைக் கட்டியெழுப்ப இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாம் வலியுறுத்திய விதத்தில் தம்மை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். 

5. கரைந்து போகாது கலந்து வாழ்தல் 

இஸ்லாம் ஏனைய மதக் கலாசாரங்களை அனுசரித்து அங்கீகரித்துச் செல்லும் மார்க்கமாகும். என்றாலும் தனது தனித்துவத்தையும் அடிப்படை நம்பிக்கைக் கோட்பாடுகளையும் இழந்து தன்னை தாரை வார்த்துவிடக் கூடாது என்பதில் உறுதியாகவுள்ளது. அமெரிக்க சமூகவியலாளர் Milton Girden (1964) சகவாழ்வுக்கான கட்டங்களை விளக்கும் போது இத்தகைய போக்கை  Cultural Assimilation ( Cultural Assimilation என்பது ஒரு குறித்த கலாச்சாரத்தைச் சார்ந்த ஒருவர் வேறு கலாச்சாரங்களோடு இணைந்து வாழும் போது அவர்களின் சட்டங்களையும் வாழ்க்கை முறைகளையும் பேணி வாழும் அதேவேளை சுய அடையாளத்தையும் தனித்துவத்தையும் காத்துக் கொள்ளும் போக்கு ஆகும்.)  என்று அழைக்கிறார் ( Cross Cultural Communication (Block - 1), Level – 5, B.A Social Science, OUSL,  P: 43.) 
நபி (ஸல்) அவர்கள் பன்மைச் சமூகங்களில் இத்தகைய பண்புகளையே கையாண்டுள்ளார்கள். 'மக்களுடன் கலந்து வாழ்கின்ற, அவ்வாறு கலந்து வாழும்போது இழைக்கப்படும் தீங்குகளில் பொறுமையாக இருக்கின்ற முஃமின்ளூ கலந்துவாழாத தீமைகளின்போது பொறுமையைக் கையாளாத முஃமினை விட சிறந்தவன்.'  (திர்மிதி – 2507)
இலங்கை முஸ்லிம்கள் இருவகையான தீவிரப் போக்குகளைக் கொண்டுள்ளனர். அந்த வகையில், ஒரு தரப்பினர் பிற சமூகங்களை விட்டும் ஒதுங்கி அவர்களைப் புறக்கணித்து வாழும் போக்கைக் கொண்டுள்ளனர். மறு தரப்பினர் பிற சமூகங்களோடு கலந்து அவர்களது கலாசார விழுமிய களியாட்டங்களிலே கரைந்து போகின்ற போக்கைக் கொண்டுள்ளனர். ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் இவ்விரு போக்குகளுமே தவறானவைளூ ஏற்றுக்கொள்ள முடியாதவை. 
எனவே, இலங்கை போன்ற பன்மைச் சமூகங்களுக்கு மத்தியில் இலங்கை முஸ்லிம்கள் மனித சமூகத்துக்கும் இலங்கை தேசத்துக்கும் நன்மை பயக்கும் விடயங்களான இரத்த தானம், போதைப் பொருள் ஒழிப்பு, மர நடுகை, டெங்கு விழிப்புணர்வு, சுதந்திர தின நிகழ்வு போன்றவற்றில் பிற சமூகத்தவரோடு இணைந்து செயற்பட வேண்டும். அதேபோல் பிற சமூகத்தவரது சுக துக்கங்களில் பங்கெடுக்கும் முகமாக அவர்களது திருமண வீடுகளுக்கும் மரணச் சடங்குகளுக்கும் செல்வதனூடாக சகவாழ்வு எனும் கயிற்றை பலமாக்கிக் கொள்ள முடியும். ஆனால் காதலர் தினக் கொண்டாட்டங்கள், இசைக் கச்சேரிகள், புதுவருடக் களியாட்டங்கள் போன்றவற்றிலிருந்து கவனமாக விலகிக் கொள்ள வேண்டும். மேலும், எமது அடிப்படைக் கடமைகள், ஹலால் விவகாரங்கள், பெண்களுக்கான ஹிஜாப் போன்ற விடயங்களில் எமது தனித்துவத்தை பேணிக்கொள்ள வேண்டும். 
இலங்கையின் பன்மைச் சமூகங்களுக்கு மத்தியில் கலந்து கரையாது வாழும்போது எமக்கென தனியான அடையாளமும் மரியாதையும் பிற சமூகத்தவர் மத்தியில் உருவாவதோடு இந்நாட்டில் சகவாழ்வைக் கட்டியெழுப்புவற்கான வாசல்கள் அகலத் திறந்து விடப்படும் என்பதில் ஐயமில்லை. 

6. மனம் திறந்த கலந்துரையாடல்களை மேற்கொள்ளல்

சகவாழ்வைக் கட்டியெழுப்ப இஸ்லாம் காட்டித்தரும் இன்னொரு வழிமுறைதான் பிற சமூகத்தவரோடு மனம் திறந்த கலந்துரையாடல்களை மேற்கொள்வதாகும். இது பற்றி அல்குர்ஆன் குறிப்பிடும்போது, 'வேதம் கொடுக்கப்பட்டவர்களுடன் மிக அழகிய முறையிலன்றி தர்க்கம் புரிய வேண்டாம்.'  என்கிறது. (அன்கபூத் - 46).
இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றிய முஸ்லிமல்லாதவர்களின் புரிதர்களை அறிந்து அதற்கேற்ப எமது கலந்துரையாடல்களை அமைத்துக் கொள்ளவேண்டும். 'அவர்களுடன் மிக அழகிய வழிமுறைகள் மூலமாகவே கருத்துப்பரிமாறல் செய்வீராக.' ( அந்நஹ்ல் - 125) என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் பார்க்கும்போது நாம் மேற்கொள்கின்ற கலந்துரையால்கள்ளூ பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், வியாபாரத்தலங்கள், பொது இடங்கள் எனப் பல மட்டங்களிலுள்ளோரையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். மேலும், தரமான ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வுகளும் கேள்வி பதில் நிகழ்சிகளும் சிங்கள, ஆங்கில மொழிகளில் புத்தக வெளியீடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது புலனாகின்றது. 
இவ்வாறான காத்திரமான செயற்பாடுகள் ஊடாக இஸ்லாம், முஸ்லிகள் பற்றிய தப்பெண்ணங்களை பிற சமூகத்தவர்களது மனங்களிலிருந்து அகற்றிவிடலாம். இதனூடாக இலங்கையில் சகவாழ்வைச் சுமுகமாக கட்;டியெழுப்ப முடியும். 

No comments:

Post a Comment