இமாம் ஷாபிஈ அவர்களின் கவிதைகளிலிருந்து சில துளிகள்(தொடர் - 01) - தமிழில் : றாபி எஸ் மப்றாஸ்

இமாம் ஷாபிஈ அவர்களின் கவிதைகளிலிருந்து சில துளிகள்
தொடர் - 01


மூலம் : தீவானுஷ் ஷாபிஈ (அரபு)
தமிழில் : றாபி எஸ் மப்றாஸ் 

01. அறிவுக்காக உன்னை முழுமையாகக் கொடுத்து விடு – அது
          அவற்றில் சிலவற்றை உனக்கு கொடுக்கும் - நீ
          அதற்கு உன்னில் சிலவற்றைக் கொடுத்தால் 
          அது எவற்றையும் உனக்கு கொடுக்காது

02. மரணம் எம்மிடம் இறங்கும் போது

எவரது முற்றத்தில் மரணம் வந்திறங்குகிறதோ 
வானம் பூமி எதுவும் அவரைக் காத்து நிற்காது
அல்லாஹ்வின் பூமி விசாலமானதுதான் - ஆனால்
தீர்ப்பு வந்துவிட்டால் அண்டவெளியும் ஒடுங்கிவிடும்
எப்போதும் உன்னை ஏமாற்றிவரும் நாட்களை விட்டுவிடு
மரணத்திலிருந்து காத்துக் கொள்ள மருந்தேதும் கிடையாது

03. இது தான் உலகம்

நாய்கள் ஆட்டிறைச்சி சாப்பிடுகின்ற வேளை
காடுகளில் சிங்கங்கள் பசியால் மரிக்கின்றன.
மணலை விரிப்பாக்கி கண்ணியவான்கள் உறங்குகின்ற வேளை
சிலபோது அடிமை பட்டு விரிப்புக்களில் உறங்குகின்றான்.

04. விதியும் உள்ளமும்

நாட்களை விட்டு விடு – அவை நாடியதை செய்யட்டும்
விதியின் தீர்ப்பு வரும் போது உள்ளத்தை திருப்திப்படுத்திக் கொள்
இரவின் நிகழ்வுகளுக்காக பதற்றமடையாதே! – ஏனெனில்
உலகின் நிகழ்வுகள் என்றும் நிலையானதல்ல
பயங்கரமான நிலைகளில்கூட துவண்டு போகாத மனிதனாக இரு!
நாணயமும் தாராளத்தன்மையும் உன் பண்புகளாக இருக்கட்டும்

15.10.2010


2 comments:

  1. ஆழமான அர்த்தமுள்ள கவிதைகள்

    ReplyDelete
    Replies
    1. இமாம் ஷாபியின் கவிதைளல்லவா...

      Delete