நபிகளாரின் வழியில் உயரிய பண்பாடுகளைக் கையாள்தல்
றாபி எஸ் மப்றாஸ்
இஸ்லாம் பண்பாட்டின் மார்க்கமாகும்ளூ நபி (ஸல்) அவர்கள் பண்பாட்டின் உறைவிடமாகத் திகழ்ந்தார்கள் 'நிச்சயமாக நீர் சிறந்த நற்குணமுடையவராவீர்' ( அல் கலம் - 52) என அல்குர்ஆன் நபி (ஸல்) அவர்களை சிலாகித்து பேசுகிறது. நபி (ஸல்) அவர்களின் உயரிய பண்பாடுகளால் கவரப்பட்டு அன்று முதல் இன்று வரை சாரை சாரையாக இஸ்லாத்தின் பக்கம் மக்கள் வருகின்றனர்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பன்மைச் சமூகங்களுக்கு மத்தியில் சகவாழ்வு கட்டியெழுப்பப்பட உயரிய பண்பாட்டு விழுமியங்கள் பேணப்படுவது அவசியமாகும். அந்த வகையில், இலங்கை போன்ற பன்மைத்துவ சமூக அமைப்பு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் எதிர்க்கொண்ட சமூக அமைப்புக்கு ஒப்பானதகும். அத்தகைய சூழ்நிலையில், பொறுமை, மன்னிப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு போன்ற நல்ல மனிதாபிமான பண்புகள் ஊடாகவே அன்றைய சமூகத்தை புடம் போட்டார்கள்.
'சங்கையான பண்பாடுகளை பூர்த்தி செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்' என நபி(ஸல்) அவர்கள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ( அஹ்மத்)
நபி(ஸல்) அவர்கள் எப்போதும் பெறுமானங்களை அடிப்படையாக கொண்ட அணுகுமுறையே (value based approach) கையாண்டுள்ளார்கள். அவர்கள்; நெகிழ்வுப்போக்கான, இலகுவான, மென்மையான மனிதமான்புகளையும், உணர்வுகளையும் மதிக்க கூடிய மார்க்கமாகவே மக்கள் மத்தியி;ல் இஸ்லாத்தை அறிமுகம் செய்தார்கள்.
'ஒரு முறை ஒரு நாட்டுப்புறத்து அறபி வந்து மஸ்ஜிதுன் நபவியில் சிறுநீர் கழித்து விடுகிறார்ளூ அதனைக் கண்ட ஸஹாபாக்கள் அவரை ஆவேசத்துடன் அடிக்க முற்படுகின்றனர்ளூ அப்போது நபி (ஸல்) அவர்கள் 'அவரைத் தடுக்காதீர்கள்' என்று கூறிவிட்டு அவர் சிறுநீர் கழித்த பின்னர் அவரை அழைத்து சிறு உபதேசங்களை கூறி அனுப்பி விடுகிறார்கள்' (புஹாரி) இவ்வாறு எத்துணை பெரிய தவறுகளையும் மென்மையான முறைகளை கையாண்டு திருத்த கூடியவர்களாக நபியவர்கள் திகழ்ந்தார்கள்.
எனவே இலங்கை போன்ற பன்மைத்துவ சூழலில் மக்களிடத்தில் மென்மையான அணுகுமுறை, பொறுமை, மன்னிப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு, உண்மை, நீதி, நேர்மை, உதவி செய்யும் மனப்பாங்கு, நல்ல விடயங்களில் ஒத்துழைக்கும் பக்குவம் போன்ற நற்பண்புகள் வளர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறான நற்பண்பாடுகள் குறித்த இனம், மதம் பற்றிய நல்லெண்ணத்தை வளர்த்து விடும். மேலும், இந்த நல்லெண்ணங்களின் வளர்ச்சியால் நாளை சகவாழ்வு நிச்சயம் கட்டியெழுப்பப்படும்.

No comments:
Post a Comment