முயன்றால் முடியும்... (சிறுகதை) - றாபி எஸ் மப்றாஸ்

முயன்றால் முடியும்... (சிறுகதை)


றாபி எஸ் மப்றாஸ்

ஆகாயம் போர்த்திய கறுப்பு போர்வைக்குள்>இதமான குளிர்காற்று மேனிகளை வருடிச் செல்ல முழு கிராமமும் மெய் மறந்து உறங்கிக் கொண்டிருந்தது. நூறு மீற்றருக்கு அப்பாலிருக்கும் கடலலலையின் ஓசையைத் தவிர வேறெதுவுமே கேட்காத மயான அமைதி அந்த பிரதேசம் முழுக்க ஆட்கொண்டிருந்தது.
'ட்றீ...ங்...' நேரம் மூன்று மணியை காட்டிக் கொண்டிருப்பதை தாங்க முடியாமல் கடிகாரம் அலற> அவசரமாக எழுந்தாள் பாத்திமா இரவு வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்கும் போது நேரம் பதினொன்றையும் தாண்டிவிட்டது. அதனாலோ என்னவோ இலேசாக தலை வலிப்பது போல்உணர்ந்தாள். இருந்தும் சுதாகரித்துக் கொண்டவளாக மின்னல் வேகத்தில் இயங்கத் தொடங்கினாள். சட்டென காலைக் கடன்களை முடித்து கை>கால்>முகம் கழுவி> போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்த தன் மகனைத் தட்டி எழுப்பினாள். 
'முனீர்...முனீர்... எழும்புங்க மகன்..." மூணு மணியாகிற்று எழும்புங்க... முனீர் முணுமுணுத்துக் கொண்டே எழுந்தான். 
'நேரம் பெய்த்து மகன்...,போய் முகத்தைக் கழுவிற்று வாங்க தொழுவம்"
முனீரும் எதுவும் பேசாது எழுந்து சென்றான். இருவரும் தஹஜ்ஜூத் தொழுகையை நிறைவேற்றினர். பாத்திமா முஸல்லாவிலே அமர்ந்து கொண்டாள>; இறையோனிடம் இரு கரம் ஏந்தியவளாய்... முனீர் படிக்கத் தொடங்கினான்...
பாத்திமாவின் கணவன் அவளை மணமுடித்து ஏழு நாட்களிலேயே வெளிநாடு சென்று விட்டார். அதன் பின்னர் வருவதும் போவதுமாக பதினைந்து வருடங்கள் நகர்ந்து விட்டன.
பாத்திமா ஒரு படிக்காத மேதை. ஐந்தாம் தரம் வரை தான் அவள் படித்தாலும் குடும்ப நிர்வாகத்தை கச்சிதமாய் செய்து கொள்ளும் ஆற்றல் மிக்கவள். அதனால் தான் தகப்பனுக்குரிய கண்டிப்பையும் தாய்க்குரிய அரவணைப்பையும் கலந்து தன் நான்கு பிள்ளைகளையும் பார்த்துப் பார்த்து வளர்த்து வருகிறாள்.
அவர்களது மூத்த மகன் தான் முனீர்... இப்போது ஐந்தாம் தரத்தில் படிக்கிறான். எப்படியாவது ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்த வேண்டுமென்பதே அவனது... இல்லை... இல்லை... பாத்திமாவின் தற்போதைய ஒரே இலக்கு. அதற்காகத் தான் அதிகாலையில் மூன்று மணியிலிருந்து அவளது போராட்டம் தொடர்கிறது.
முனீரும் காலப்போக்கில் தன் தாயின் கனவுக்கு இசைந்து கொடுக்கத்; தொடங்கினான். பாத்திமாவின் கணவனும் தன் மகனுக்கென புத்தகங்களை வாங்குவதற்காக மேலதிக வேலைகளை செய்து> தன் சதுரத்தை சாறாக்கி வழமையை விட அதிமான பணத்தையும் அனுப்பி வைத்தார்.
 காலை வேளையில்> முனீர் பாடசாலைக்குகப் போக அவசர அவசரமாக தயாராகுவான். அந்த நேரங்களில்> பாத்திமா அவனுக்கு உணவை ஊட்டி விடுவாள்...அவள் ஊட்டுவது உணவை மட்டுமல்ல ஈமானையும் சேர்த்துத்தான்.
முனீருக்கு ஓய்வெடுக்கவே நேரமில்லை. காலையில் பாடசாலை> மதியம் மேலதிக வகுப்பு> மாலை பிரத்தியேக வகுப்பு> இரவில் மாமியின் வீட்டில் படிப்பு என இத்தனை சுமைகளுக்கு மத்தியிலும் அவன் நேரம் தவறாது தொழுது வருவது உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது.
இப்போது பாத்திமாவின் கனவுப் பூங்காவில் வசந்த காலம் ஆரம்பித்து விட்டது. ஆமாம்... அதுவரை காலமும் தவணைப் பரீட்சைகளில் ஏழாம் எட்டாம் பிள்ளையாக வரும் முனீர், இப்போதெல்லாம் பரீட்சைகளில் அதிக திறமை காட்டி முதலாம் பிள்ளையாக வரத் தொடங்கி விட்டான். இத்திருப்பங்;களெல்லாம் பாத்திமாவின் நம்பிக்கைக் கோட்டையை இன்னும் பலப்படுத்தின.
பரீட்சைக்கு நாட்கள் நெருங்க நெருங்க பாத்திமாவின் தியாகங்களும் முனீரின் முயற்சிகளும் அதிகரித்துக் கொண்டே வந்தன. எப்போதும் குர்ஆனும் கையுமாக இருக்கும் பாத்திமாவின் தாயும் தன் பேரனின் வெற்றிக்காக அடிக்கடி பிரார்த்தித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்.
அன்று ஞாயிற்றுக் கிழமை> முனீரின் இதயம் சற்றுப் பலமாகவே துடித்துக் கொண்டிருந்தது. இதுவரைகால முயற்சி> தியாகம்> பிரார்த்தனை என எல்லாவற்றுக்குமான சோதனையை எதிர்கொள்ளப் போகிறான். காலை தஹஜ்ஜூத் தொழுகையுடன் இறையோனைப் பிரார்த்தித்து இறுதியாய் ஒருமுறை படித்துவிட்டு பரீட்சைக்குச் செல்லத் தயாரானான். பாத்திமாவின் தைரியமூட்டும் வார்த்தைகளும் பாத்திமாவின் தாயின் வாழ்த்துக்களும் முனீரின் இரு செவிகளில் ஒலித்தபடியே விரைந்தான் வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டும் வேட்கையோடு...

இரண்டு மாதங்கள் நகர்ந்து போயின...

 'ஸ்கொலஷிப் றிசல்ட் வந்துட்டாம்...' திடீரென வந்த இந்தச் செய்தி அந்த ஆரம்பப் பாடசாலையையே தலைகீழாக மாற்றிப் போட்டது. அனைவரும் பெரும் பதட்டத்தில் காட்சியளித்தனர். அதிபர்> ஆசிரியர்கள் யாருமே இதற்கு விதிவிலக்கு கிடையாது. மாணவர்கள் பாடசாலைக் கணினியிலே பெறுபேறுகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
முனீர் பதட்டத்தோடு பாடசாலைப் பள்ளிவாயலுக்கு ஓடினான். தாய் சொன்னது போல் இரண்டு ரகஅத்துக்கள் தொழுதான். இறைவனிடம் கண்ணீர் மல்க கெஞ்சினான். அப் பிஞ்சு உள்ளத்தில் பாத்திமா ஈமானை அவ்வாறுதான் விதைத்திருந்தாள். பாத்திமாவின் வார்த்தைகள் அவன் மனத்திரையில் ஓட ஆரம்பித்தன.

      ' மகன்> நம்மட குடும்பத்துல் யாரும் ஒழுங்காப் படிக்கல. நீயாவது நல்லாப் படிக்கணும். அப்பதான் ஒன்ட தம்பிமார்> தங்கச்சி எல்லாரும் படிப்பாங்க' சட்டென நினைவுக்கு வந்தவன் வகுப்பறைக்கு ஓடினான்' 
அங்கே அதிபர் முதல் அனைத்து மாணவர்களும் அவனுக்காகக் காத்திருந்தனர். அதிபர் முனீரை அழைத்து கைலாகு செய்தவண்ணம்

      ' முனீர்> நீதான் டிஸ்ரிக்கிலேயே பெஸ்ட்> வெல் டன்' என பாராட்டினார். முனீருக்கு மகிழ்ச்சியும் ஆனந்தக் கண்ணீரும் பெருக்கெடுத்தது.
      ' சந்தோஷமான விஷயம் ஏதாவது நடந்தா ஒடனே ஸஜதா செய்யணும்' என்று தாய் கூறியது நினைவுக்கு வரவே அவ்விடத்திலே விழுந்து இறையோனுக்கு சிரம்பணிந்தான். அவ்விடத்திலேயிருந்த அனைவரும் ஆச்சரியத்தில் வாய்வைத்து நின்றனர்.
'முனீர் பாஸ் ஆகிட்டானாம்' என்ற செய்தி பாத்திமாவின் செவிகளுக்கு எட்டவே ஆனந்தக் கண்ணீரோடு இறைவனுக்கு நன்றி செலுத்தினாள். தனது தியாகங்களுக்கும் தன் கணவன் படும் கஷ்டங்களுக்கும் தன் தாயின் பிரார்த்தனைகளுக்கும் முனீரின் முயற்சிகளுக்கும் ஒரு அர்த்தம் கிடைத்திருக்கிறது என எண்ணும் போது அவளுக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.

13.06.2010

2 comments:

  1. இவ்வாறான தாய்மார்களினாலே தான் இன்னும் எம் சமுதாயத்தில் கல்வியுடன் சேர்த்து ஒழுக்கமும் கொண்ட ஓரிரு இளைஞர்களை காண முடிகிறது...💞💞

    ReplyDelete
    Replies
    1. இக்காலத்தில் அத்தகைய பயிற்றுவிப்புக்கள் குறைவாகவே உள்ளன..
      உங்கள் கருத்துக்கு நன்றி

      Delete