ஒப்பீட்டுக்கல்வி ஆசிரியர்களுக்கு ஏன் அவசியம்? - றாபி எஸ் மப்றாஸ்

ஒப்பீட்டுக்கல்வி ஆசிரியர்களுக்கு ஏன் அவசியம்? 

றாபி எஸ் மப்றாஸ்

வரைவிலக்கணம்
ஒப்பீட்டுக்கல்வி என்ற பதத்தை வரைவிலக்கணப்படுத்தும் போது அதில் ஒப்பீடு, கல்வி என இருபதங்கள் காணப்படுகின்றன.
ஒப்பீடு என்பது ஒன்றை இன்னொன்றுடன் தொடர்புபடுத்தி நோக்கும் செயன்முறையாகும் அதே போல் கல்வி என்பது அறிவு,திறன்,மனப்பாங்கு விருத்தியினூடாக இடம் பெறும் நிரந்தர நடத்தை மாற்றமாகும் எனச் சுருக்கமாகக் கூறலாம்.

ஒப்பீட்டுக் கல்வி தொடர்பாக அறிஞர்களின் பரந்துபட்ட வரைவிலக்கணங்களினூடாக எமது சொந்த வரைவிலக்கணத்தைக் குறிப்பிடுவது பொருத்தமானதாக அமையும். அந்த வகையில்,

'ஒப்பீட்டுக்கல்வியானது பொதுவாக வௌ;வேறு கலாசாரங்கள், பகுதிகள் அல்லது நாடுகளுக்கிடையிலான கல்வி முறைகளை மதிப்பிடுவதைக் குறிக்கின்றது.' (மைக்கல் பிரான்ஸ);

 நிக்கலஸ் ஹேன்ஸ் (1958) ' ஒப்பீட்டுக் கல்வியானது வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சமய, சமூக, கலாசார, பொருளாதார, அரசியல் காரணிகளின் பகுப்பாய்வும் அவற்றுக்கான தீர்வுகளுமாகும்'

கெண்டல் ' ஒப்பீட்டுக்; கல்வி என்பது கோட்பாடுகளை அன்றி நடைமுறையில் உள்ள கல்விச் செயற்பாடுகளை ஒப்பு நோக்கும் ஓர் ஆய்வுத்துறையாகும். வெளிநாடுகளில் கல்வி முறைகளை ஆராய்வது என்பது ஒருவர் தமது தாய் நாட்டின் கல்வி முறையின் பின்புலம் அடித்தளம் என்பவற்றை பகுப்பாய்வு செய்யும் ஒரு முயற்சியாகும்.'

எனவே மேற்குறிப்பிட்ட வரைவிலக்கணங்களை மையமாகக் கொண்டு ஒரு நாட்டில் ஒரு பிரதேசத்தில் பின்பற்றப்படும் கல்வியின் நோக்கங்கள், பாடசாலை நிதி நிர்வாக முறைமைகள், கற்றல் கற்பித்தல் முறைமைகள், கலைத்திட்டம் ஆசிரியரின் வகிபங்கு, சமூகத்திற்கும் கல்விக்குமிடையிலான தொடர்பு என பல கல்விசார் துறைகளை இன்னொரு நாட்டு கல்வி முறைகளுடன் தொடர்புபடுத்தி அதன் பொருத்தப்பாடுகள் நடைமுறைச் சாத்தியம், குறை, நிறை போன்றவற்றை மதிப்பிட்டு ஆராயும் செயன்முறை ஒப்பீட்டுக்கல்வியாகும் என வரைவிலக்கணப்படுத்த முடியும்.

 ஓர் ஆசிரியர்  ஒப்பீட்டுக்கல்வியை கற்பதனூடாக பெறும் நன்மைகள் 

ஒப்பீட்டுக் கல்வியானது கல்விக் கொள்கை வகுப்பாளர்களுக்கு மிகவும் பிரயோசனமானது எனக் கூறப்பட்டாலும் எத்தகைய கல்விக் கொள்கையையும் அடிமட்டத்தில் பிரயோகிக்கும் பொறுப்பு ஆசிரியர்களையே சாரும் அந்த வகையில் ஒப்பீட்டுக்கல்வி பற்றிய தெளிவான அறிவு ஒரு ஆசிரியருக்கு மிக அவசியமாகும்.

தமது நாட்டிலும் பாடசாலையிலும் ஏன் வகுப்பறையிலும் பின்பற்றப்படும் கல்வி முறையின் நிறை குறைகளை இனங்கண்டு கொள்வதற்கு ஒரு ஆசிரியருக்கு ஒப்பீட்டுக் கல்வி உதவுகிறது.
தேசியக் கல்வி ஆணைக்குழுவினால் கொண்டு வரப்படும் கல்விக் கொள்கைகளை துல்லியமாகப் புரிந்து கொள்வதற்கும் அதனை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்கும் ஒரு ஆசிரியருக்கு ஒப்பீட்டுக் கல்வி பற்றிய அறிவு அவசியமாகிறது.; உதாரணமாக 5நு திட்டத்தின் தோல்விக்கு ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் அம்முறைமை பற்றிய தெளிவின்மையே காரணம் என ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றது.
சமூக கலாசார வேறுபாடுகளைத் தெரிந்து கொள்ளவும் அவற்றை மதித்து அனுசரித்து நடப்பதற்கான வழிகாட்டல்களை மாணவர்களுக்கு வழங்கவும் ஒப்பீட்டுக் கல்வி உதவுகிறது. இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இனக்கலவரங்களுக்கும் முப்பது வருட யுத்தத்திற்கும் காரணங்களை அலசி ஆய்கின்ற போது இன்னும் தெளிவாக உணர முடிகின்றது. 

கலாச்சாரம், மக்கள், சமூக அமைப்பு மற்றும் தொழில்வாய்ப்புகளைப் புரிந்து கொண்டு அவற்றுக்கேற்ப மாணவர்களை பயிற்றுவிக்கவும் தன்னை சமகால உலகுக்கு ஏற்றவகையில் இற்றைப்படுத்திக் கொள்வதற்கும் ஒப்பீட்டுக் கல்வி உதவுகிறது.
மாணவர்களின் கல்வித் தேவையை சரியாக இனங்கண்டு அவற்றை பல புதிய வழிமுறைகளில் பூர்த்தி செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒப்பீட்டுக் கல்வி உதவுகிறது.

ஒரு நாட்டின் கல்விக் கட்டமைப்பின் முழுமையான அல்லது பகுதியான மேம்பாடுகளை அறியவும் தமது மாணவர்களுக்குப் பொருத்தமான முறையில் ஊக்கல்களை வழங்குவதற்கும்  ஒப்பீட்டுக் கல்வி உதவுகிறது
கல்விச்செயன்முறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கு ஒப்பீட்டுக் கல்வி உதவுகிறது. தொடர்பாடல் தொழிநுட்ப அறிவுகளை மையப்படுத்திய இலங்கையின் புதிய போக்குகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
கல்விச் சீர்திருத்த ஆலோசனைகளையும் உபாயங்களையும் பெறுவதற்கும் அதனை தமது பாடசாலையிலும் வகுப்பறையிலும் பிரயோகிப்பதற்கும் அதன் சாதக பாதகத் தன்மையை முற்கூட்டியே மதிப்பிடுவதற்கும் ஒரு ஆசிரியருக்கு ஒப்பீட்டுக் கல்வி பெரிதும் துணை புரிகிறது.

புதிய வேலைவாய்ப்புக்களை நோக்கி இளைஞர் சமுதாயத்தை நகர்த்துவதற்கு ஒப்பீட்டுக் கல்வி ஆசிரியருக்கு பெரிதும் உதவுகிறது. இத்தகைய முன்னெடுப்புக்களின் மந்த நிலைதான் இலங்கையில் சிங்கள இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட சேகுவேரா புரட்சியாகும்
ஒரு ஆசிரியருக்கு கொள்கை வகுப்புக்கும் பகுப்பாய்வுக்கும் நடைமுறைச் சாத்தியத்திற்கும் இடையிலான தொடர்பை அறிந்து கொள்ள உதவுகிறது;
பல்வேறு கல்விமுறைகளின் வெற்றி தோல்விகளை அறிந்து கொண்டு நல்ல கல்வி முறைமைகளை தமது நாட்டில் அல்லது தாம் சார்ந்த பாடசாலையில் நடைமுறைப்படுத்துவதற்கும் ஒப்பீட்டுக் கல்வி உதவுகிறது.
; கல்வி சார் துறைகளில் ஆசிரியரின் ஆய்வுத்திறனை விருத்தி செய்யவும் கல்வித்துறைக்கு சேவையாற்றவும் ஒப்பீட்டுக் கல்வி துணை செய்கிறது.கிறது
கல்வி மாற்றங்களுக்கேற்ப ஆசிரியர் மாணவர்களை அறிவூட்டுவதற்கும் சமூகத்pன் பொது அபிவிருத்திக்கும் ஒப்பீட்டுக் கல்வி உதவுகிறது.

No comments:

Post a Comment