றாபி எஸ் மப்றாஸ்
ஒரு இனம் அல்லது மதம் தமது கொள்கைகளை அழகிய முறையில் பண்பாடாக மக்களுக்கு மத்தியில் எடுத்துரைப்பதில் தவறில்லைளூ ஆனால், ஒவ்வொருவரும் தத்தமது கொள்கையையும் மதத்தையும் எவ்வித தடையுமின்றிப் பின்பற்ற பூரண சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதை அல்குர்ஆன், 'உங்களுக்கு உங்களது மார்க்கம், எனக்கு எனது மார்க்கம்.' ( காபிரூன் - 6) என்ற வசனத்தின் மூலம் வலியுறுத்துகின்றது.
எனவே, எமது இலங்கைச் சூழலில் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற பல மதங்கள் காணப்படுகின்றன. இந்த ஒவ்வொரு மதமும் மற்றைய மதங்களின் இருப்பையும் அதன் பண்பாட்டு விழுமியங்களையும் அனுசரித்து நடக்க வேண்டும். பிற மத அனுஷ்டானங்களை கேவலப்படுத்துவதும் அசிங்கப்படுத்துவதும் துடைத்தெறியப்பட வேண்டும்.
இஸ்லாம் எடுத்தியம்பும் இத்;தகைய பண்புகளில்லாதபோது நாட்டின் சகவாழ்வுக்கு அபரிதமான பாதிப்பு ஏற்படும். 2014ம் ஆண்டு நிகழ்ந்த பேருவளைக் கலவரம், தற்காலத்தில் பேசப்படும் அல்குர்ஆன் அவமதிப்பு வழக்கு என்பன இவற்றுக்கு சான்றாகக் கூறலாம்.
எனவே, பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என எம்மதத்தைப் பின்பற்றுபவர்களாயினும் பிற மதங்களை காயப்படுத்தாது, மத அனுஷ்டானங்களுக்கு இடையூறு விளைவிக்காது தமது கிரிகைகளே மேற்கொள்ள வேண்டும். இஸ்லாம் சொல்லும் இத்தகைய கொள்கைச் சுதந்திரமும் மத சகிப்புத்தன்மையும் பேணப்படுமானால் இந்நாட்டில் நிச்சயம் சகவாழ்வு கொடிகட்டிப்பறக்கும் என்பதில் ஐயமில்லை.
மதச் சகிப்புத்தன்மைக்கு அப்பால் பிற மதங்களையும் கலாசார விழுமியங்களையும் மதிக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.
'அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குபவர்களை நீங்கள் ஏச வேண்டாம். அவ்வாறு நீங்கள் செய்தால் அவர்கள் பதிலுக்கு அத்துமீறி எவ்வித அறிவுமின்றி அல்லாஹ்வை ஏசுவார்கள்.' (அல்-மும்தஹினா-8)
அதுமட்டுமல்லாது, யுத்தங்களின்போதும் பிறமதத் தலைவர்கள், பெண்கள், குழந்தைகள் கொல்லப்படக்கூடாது என்றும் எதிர் நாட்டு இயற்கை வளங்கள், மத ஆலயங்கள் அழிக்கப்படக்கூடாது என்றும் முஸ்லிம் தலைவர்கள் கட்டளையிட்டதை வரலாறு மறக்கவில்லை.
மேலும் நூற்றுக்கணக்கான வருடங்கள் முஸ்லிம்களின் ஆட்சியிலிருந்த ஸ்பெய்ன், இந்தியா போன்ற நாடுகளில் பிற மதத்தவர்களின் எண்ணிக்கையும், பிற மத ஆலயங்களின் அழியாத அடையாளங்களும் மத சகிப்புத்தன்மைக்கு இஸ்லாம் விட்டுச் சென்ற நடைமுறைச் சான்றுகளாகும்.

👌 அருமையான பதிவு
ReplyDelete