கலைந்து போகும் கனவுகள்... (சிறுகதை) றாபி எஸ் மப்றாஸ்

கலைந்து போகும் கனவுகள்...

                                                       றாபி எஸ் மப்றாஸ்


            டியூஷன் சென்டர்.. 'பிஸிக்ஸ்' பாடம்...  நிஷாதின் ரவுசர் பக்கட்டில் கிடந்த ஃபோன் கொஞ்சம் அதிர்ந்து நின்றது.
'எந்தக் கஞ்சனோ தெரியா இந்த டைம்ஸ் 'மிஸ்கோல்' அடிக்கான்' என குறுகுறுத்தவாறே 'ஃபோனை' பார்த்தான்... இதுவரை பரீட்சயமில்லாத நம்பர் அது... ஆனால் 'எயார் டெல்' நம்பர்தான்.
நிஷாதும் பதிலுக்கு 'ஹு ஆர் யூ' என ஒரு மெஸேஜை அனுப்பிவிட்டு புரியாத பிஸிக்ஸ் பாடத்துக்கு செவி சாய்க்கத் தொடங்கினான்.
மீண்டும் தொ(ல்)லை பேசி அதிரத் தொடங்க அருவருப்போடு தூக்கினான். 'என்னை ஒங்களுக்கு ஏற்கனவே தெரியும்' என ஒரு குட்டி மெஸேஜ் அவனது வினாவுக்கு விடையாய்.
'யாரோ இருக்கும்' என ஒரு முறை மூளையை பிளிந்தவன் 'ஒரு கோல்' எடுத்துப் பாத்தா சரி' என்ற முடிவுக்கு வந்தான்.
என்றாலும் அவனது 'கோலு'க்கு பதில் 'நம்பர் பிஸி' என்பதாகத்தானிருந்தது. பல முறை முயற்சித்தும் பதிலில் மாற்றமில்லை.
நிஷாதின் இந்தப் போராட்டத்திற்கு மத்தியில் பிஸிக்ஸ் பாட சேரின் குரல்களும் இடையிடையே அவனது செவிகளை ஆட்கொண்டான்.
'ப்ளீஸ்... இப்ப கோல் பண்ணாதீங்க நாநா வீட்டில இருக்கார்' இறுதியாய் வந்த மெஸேஜ் 'இது ஒரு கேர்ள் தான்' என்பதை உறுதிசெய்ய அவனுக்கு ஏதுவாய் அமைந்தது.
அக்கம் பக்கம் பார்த்தான்... அமைதியாய் ஃபோனை பக்கட்டில் போட்டான். ஒரு வித குழப்பமும்இ குதூகலமும் மனதில் கூத்தாடித் தொடங்கின. 
பிஸிக்ஸ் பாடம் முடிந்த கையோடு விடுதிக்கு பறந்தான். கட்டிலில் புரண்டான்.. மெஸேஜ் பரிமாற்றம் களைகட்டத் தொடங்கியது. 
நாட்கள் நகர்ந்தோட மெஸேஜ் பரிமாற்றம் முகம் காணாஇ குரல் கேளா காதலாய் நிஷாத் மனதில் பரிணமிக்கத் தொடங்கியது.
நிஷாத் இப்போதெல்லாம்... பாடங்களுக்கு அடிக்கடி 'கட்' அடிப்பதும்இ கேட்டால்... தலைவலிஇ கால் வலி என ஊரிலுள்ள வலிகளையெல்லாம் வலிந்து சொல்வதும் வழக்கமாக மாறிப்போனது. 
அது மட்டுமா? முன்பெல்லாம் எப்போதாவது ஒரு முறை தனது ஃபோனுக்கு மட்டும் 'றீசார்ஜ்' பண்ணும் நிஷாத் இப்போது... எப்பவுமே இரண்டு ஃபோன்களுக்கு றீசார்ஜ் பண்ணும் விநோதம்...

இப்படியெல்லாம் செய்ய இவனொன்றும் பெரிய பணக்காரனல்ல. வாப்பா சாதாரண 'டிரைவர்' நிஷாத்தான் வீட்டில் மூத்த பிள்ளைஇ உம்மா மூன்று சகோதரிகள் என எல்லாமே வாப்பாவின் உழைப்பில் தான்... தன் கஷ்டம் தெரியக்கூடாதென வாப்பாஇ நிஷாதை கொழும்புக்கு அனுப்ப படிக்க வைத்திருந்தார்.
இது இப்படியிருக்க ஒரு வாரத்திற்கு ஒரு முறை உம்மா கோல் எடுத்து குடும்ப கஷ்டங்கள் பற்றி பேசினாலும் கவலைப்படுவதற்குப் பதிலாக எரிச்சலடையத் துவங்கினான். உம்மா மீது எரிந்து விழுந்தான்.
ஆனால் இந்த இரு மாதத்திலும்இ அந்த எஸ்.எம்.எஸ் காதலியைப் பற்றிஅ வன் அறிந்ததெல்லாம் அவளது பெயர் 'எஸ்' என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்குதாம்.. நிஷாதின் ஊர்தானாம். அதே அல்-ஹிறா ஸ்கூலில் படித்தவனாம்.
எதிர்வரும் ஏப்ரல் லீவில் அவளே நேரில் வந்து தன்னை இனங்காட்டிக் கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தாள். ஆச்சரியமான விடயம் என்னவெனில் இதுவரை அவனது குரலைக் கூட அவன் கேட்டதில்லை. ஏனெனில் இரவில் மட்டுமே தன்னிடம் ஃபோன் இருப்பதாகவும் பகல் பொழுதுகளில் நாநா போனை கொண்டு போய் விடுவாரெனவும்இ இரவில் தான் பேசினால் வீட்டில் தூங்கும் எல்லோரும் விழித்துவிடுவர் எனவும் தக்க நியாயத்தை அச்சொட்டாக சொல்லியிருந்தாள்.

அன்று நாட்காட்டி ஏப்ரல் மாதம் காட்டி நிற்க நண்பர்களுக்கெல்லாம் கைகாட்டி ஊருக்கு பறந்தான் சிக்கு புக்கு ரயிலில்.. ஆயிரம் கற்பனைகளும் கனவுகளும் நிறைந்த மனத்தோடு..
வீடு சென்று உற்றாரையும் உறவினரையும் சந்தித்தான். ஆனால் தான் சந்திக்க நினைக்கும் ஜீவனிடமிருந்து எந்தவொரு மெஸேஜையும் காணவில்லை என்ற சோகம் அவன் முகத்தில் அப்பியிருந்ததை யாரறிவார்?..!
'டுடே 4.00 பிஎம் க்கு டவுன் கார்டுனுக்கு வரவும்' போனையே பார்த்திருந்த அவன் கண்கள் பூக்கத் தொடங்கின. ஆனந்த தாண்டவமாடத் துவங்கினான். 
இனி கேட்கவா வேண்டும்... நிஷாத் சீவிஇ சிங்காரித்து புது மாப்பிள்ளை போல் 'டவுன் கார்டுனுக்கு' விரைந்தான்.
ஆயிரம் முகங்கள் அந்த கார்டுனை தரிசித்தாலும் அவன் தேடும் முகத்தை காணவே இல்லை. நேரம் 6.00 மணியை தாண்டிக்கொண்டிருந்தது. 'கார்டுனை' பூட்டிவிட வார்ச் மேனும் தயார் நிலையில் நின்றார்.!
எத்தனையோ மெஸேஜ் அனுப்பியும் பதிலேதும் இல்லை.. யோசனையில் மூழ்கிப்போய் நிலத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
'நிஷாத்' யாரோ தன்னை அழைத்தது கேட்டு சிந்தனை கலைந்து நிமிர்ந்து பார்த்தான்.
முன்னாள் வகுப்புத் தோழர்களான சஹீமும்இ ஹபீலும் சிரித்தபடி நின்றிருந்தார்கள். நிஷாத் திரடுக்கிட்டுப் போனான்.. என்றாலும் சுதாகரித்துக்கொண்டு 'என்னடா மச்சான் சுகமா' தயக்கத்துடன் கேட்டான்.
'அதிருக்கட்டும்இ என்னடா வந்ததும் வராததுமா இங்க வந்துட்டாய்' என சஹீம் சட்டென எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாடினாலும் 'இல்லஇ ப்ரெண்ட் ஒன்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கன்' என பதில் சொல்லி முடிய முன்பே.
அவர்கள் இருவரும் கைகொட்டி வெடிச் சிரிப்பு சிரித்தார்கள். வயிறு குலுங்கக் குலுங்க சிரித்தார்கள்.
ஆத்திரம் அடக்க முடியாத நிஷாத் 'ஏன்டா சிரிக்கிறீங்க' எனக் கத்தினான். 'கொஞ்சம் வெயிட் பண்ணுஇ ஒனக்கு கோல் எடுக்கன்' என்று கூறியவாறே நம்பரை அழுத்தினான் சஹீம்.
நிஷாதின் ஃபோன் அதிரத் தொடங்கியது. அந்தோ பரிதாபம்!! அதே நம்பர். தன் காதலி என நம்பியிருந்து அதே நம்பர் தான்
'சும்மா ஒரு மெஸேஜ் வந்துட்டா உடனே விழுந்துவிடுவீங்களே' என்றவாறே சஹீமும் ஹபீலும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்கள்.



நிஷாத் இடிந்து உடைந்து போனான். தலையில் யாரோ பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போட்டது போலிருந்தது அவனுக்கு. 
அவனை அறியாமலே கண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது. 'இந்த லவ் என்ட பெயரால... இவ்வளவு நாள் படிப்பு... ஏரியாவில கட்டிக் காத்த மானம்... நான் டொக்டராகனும் என்டு ஒழச்சி ஓடாத் தேயுற வாப்பாட கனவு... இந்த குடும்பத்தை காப்பாத்தி... என்னை ஹஜ்ஜுக்கு கூட்டிட்டுப் போவான் என்டு காத்திருக்கிற உம்மாட ஆசை எல்லாத்தையும் பாழாக்கிட்டனே' என நினைக்கும் போது இன்னும் அழுகை அழுகையாய் வந்தது. என்ன செய்ய? முதலில் காதல் பிறகு கைசேதம்.

காதல் என்ற பெயரில் ஏமாற்றுவோரும் ஏமாந்து போவோரும் எங்குமே பரந்து கிடக்கின்றனர். இதிலிருந்து பாதுகாப்பாய் வாழ்வதே இளைஞர்களின் இன்றைய சவால்!



14.02.2013

3 comments:

  1. இளைஞர்களின் சரியான எதிர்காலத்துக்கான
    அருமயைான கதை..
    மேலும் எதிர்பார்க்கிறோம் உங்கள் பதிவுகளை 🙋‍♀🙋‍♀🙋‍♀

    ReplyDelete